Tuesday, June 16, 2009

நான் - 32 கேள்விகளுக்குள் !

சமீபத்தில் 'குழலி' எனும் அழகிய பெண் குழந்தைக்குத் தந்தையாகித் தன் வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கும் , என்னை இப்பதிவு எழுத அழைத்த விழியன் அண்ணாவுக்கு வாழ்த்துக்களும், எனது நன்றியும் !

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு இந்தப் பெயர் பிடிக்குமா?

பிறந்தவுடன் பெற்றோர் வைத்தது. எனது வீட்டுக்கருகில் மட்டும் இந்தப்பெயரில் குறைந்தது பத்துப் பேராவது இருக்கிறார்கள். ஊருக்குள் எப்படியும் முப்பது பேராவது இருப்பார்கள். எனவே 'ஷெரீப்' எனும் எனது தந்தையின் பெயரை என் பெயரோடு இணைத்துக்கொண்டேன். இணையத்தில் உலாவரத் தொடங்கியபிறகு புனைப்பெயர்களுக்கு அவசியங்களின்றி இப்பெயரில் நான் மட்டுமே எழுதவெனக் கிளம்பியிருப்பது புரிந்தது. ஆகவே பிடித்திருக்கிறது.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு, இணையம் வந்து பார்த்தபொழுது, எனது எழுத்துக்களை மட்டுமே பார்த்து நேசித்த, பல நூறு அன்பு உள்ளங்கள் என்னைத் தேடியிருப்பது கண்டு ஆனந்தத்திலும், எல்லோரையும் கவலைக்குள்ளாக்கி விட்டோமே என்ற ஆதங்கத்திலும் அழுகை வந்தது. பாலை நிலமொன்றில் பல காலங்களாகத் தனித்து, தாகித்துக் கிடப்பவனுக்கு எப்பொழுதும் வற்றாத, இனிமையான, தெள்ளிய நீரோடையொன்று சொந்தமானதைப் போல உணர்ந்தேன்.

3. உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?

ஒரு காலத்தில் அழகிய கையெழுத்து என் வசமிருந்தது. பள்ளியில் படிக்கும் காலத்தில் அகில இலங்கை ரீதியாக அழகிய கையெழுத்துக்கான பரிசும் சான்றிதழும் வாங்கியிருக்கிறேன். இப்பொழுது இரு வருடங்களாக கையெழுத்து போடுவதற்குத் தவிர, பேனையைத் தொடவில்லை. தட்டச்சு பழகிவிட்டது. இன்று எழுதிப் பார்த்தேன். ஆங்கில மருத்துவரின் மருந்துச் சீட்டுக் கையெழுத்துப் போல எழுத்துக்கள் கோணல்மாணலாக இருக்கின்றன. எனினும் பிடித்திருக்கிறது. எனது கையெழுத்து என்பதற்காக மட்டும்.

4. பிடித்த மதிய உணவு என்ன?

வீட்டுச் சமையல் எதுவானாலும். நான் சைவப்பிரியன்.

5. நீங்கள் பார்த்தவுடன் யாருடனாவது உடனே நட்புக் கொண்டாடக் கூடியவரா?

அப்படித்தான் எல்லோரும் சொல்கிறார்கள். எல்லோரிடமும் பேசுவேன். பழகுவேன். அதற்கு எனக்கு ஒரு புன்னகை போதுமானதாக இருக்கிறது. இதுவரையில் எதிரிகள் என்று யாருமில்லை. எல்லோருமே நண்பர்கள்தான். நல்லவர்கள்தான்.

6. கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

எப்பொழுதாவது கடலில் குளிக்கப்பிடிக்கும். ஊரில் பெரிய ஆறு ஓடுகிறது. சிறு வயது முதல் குளித்தல், நீச்சல், தண்ணீர் விளையாட்டுக்கள், தூண்டிலிட்டு மீன் பிடித்தலென எனது பல சுவாரஸ்யமான காலங்களை அழகிய அந் நதி பார்த்திருக்கிறது. அருவிக் குளியல் எப்பொழுதாவதுதான் வாய்த்திருக்கிறது. அதுவும் பிடிக்கும். அதை விடக் கிணற்றுக்குளியல் மிகப்பிடிக்கும். எனது வீட்டுக்கருகில் ஒரு கிணறு இருக்கிறது. எப்பொழுதும் நீர் மிதந்து ஓடுமது குளிர் காலங்களில் உஷ்ணத்தோடான வெதுவெதுப்போடும், கோடை காலங்களில் குளிரானதுமான நீரைக் கொண்டிருக்கும். அதில் குளிப்பது மிகப் பெரிய ஆனந்தம்.

7. முதலில் ஒருவரைப் பார்க்கும்போது எதனைக் கவனிப்பீர்கள்?

கண்கள்.

8. உங்களிடம் உங்களுக்குப் பிடித்த விடயம் என்ன? பிடிக்காத விடயம் என்ன?

பிடித்தவிடயம் - எதுவும் முடியுமென்ற தன்னம்பிக்கை, எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்குமுறையுடனும், நேர்த்தியுடனும், தூய்மையாகவும் இருக்க முயல்வது.

பிடிக்காதது - மேற்சொன்னவற்றை மற்றவர்களிடமும் எதிர்பார்ப்பது, குழந்தைகளை அழ வைப்பது.

9. உங்கள் பாதியிடம் உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத விடயங்கள் என்ன?

இதுவரை அப்படி யாரும் இல்லை.

10. யார் பக்கத்தில் இல்லாமல் இருப்பதற்காக வருந்துகிறீர்கள்?

தாய் மற்றும் அன்பானவர்கள் எல்லோரும்.

11. இதை எழுதும்போது என்ன வண்ண ஆடை அணிந்திருக்கிறீர்கள்?

கருநீல ஜீன்ஸ், ஆகாயநீல குர்தா.

12. என்ன பாட்டு கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?

முத்துநகையே..முழுநிலவே..குத்துவிளக்கே..கொடிமலரே..(பாடகி எஸ்.ஜானகியின் குரல் உள்ளமள்ளிப் போகிறது )

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக மாற உங்களுக்கு ஆசை?

ஆகாய நீலம்.

14. பிடித்த மணம்?

குறிப்பிட்டுச் சொல்லத்தெரியவில்லை. குழந்தைகளிடமிருந்து வரும் வாசனையும், சந்தன மணமும் பிடிக்கும். மனம் மயக்கும் எல்லா நறுமணங்களும் பிடிக்கும்.

15. நீங்கள் அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களைப் பிடித்து உள்ளது? அவர்களை அழைக்கக் காரணம் என்ன?

தாயுமானவன் வெங்கட் - கவிஞர், ஒளிப்பதிவாளர், திரைப்பட இயக்குனர் எனப் பல துறைகளிலும் திறமை படைத்தவர். எனது அன்புக்குரிய நண்பர். நான் சோர்ந்துவிடும் போதெல்லாம் உற்சாகப்படுத்துபவர். இவரது அன்புக்கு நான் அடிமை.

ஒளியவன் பாஸ்கர் - கவிதை, சிறுகதை எனத் தொடர்ந்து எழுதிவரும் நண்பர். நல்ல எழுத்துத் திறமையை வெளிக்காட்டும் இவரின் பால்ய காலத்தில் தான் சந்தித்த மனிதர்கள் பற்றிய குறிப்புக்கள் எனக்கு மிகப் பிடித்தமானவை. வெளிப்படையானவர்.

ஃபஹீமா ஜஹான் - கவிதைகள். எனது பாடசாலை நாட்களில் இவரின் கவிதைகள் வாரம்தோறும் இலங்கையின் பிரபலப் பத்திரிகையில் வரும். எனக்குத் தெரிந்த பல மாணவர்கள் அக் கவிதைகளை வெட்டி எடுத்துவந்து, பாடசாலைப் புத்தகங்களுக்குள் வைத்து வாசித்து ரசிப்பதைக் கண்டிருக்கிறேன். அக் கவிதைகளின் அறிமுகம் அப்படித்தான் ஆயிற்று எனக்கும். என்னாலும் எழுத முடியுமெனும் தன்னம்பிக்கையை ஊட்டியவர். எந்த ஊடக வலைக்குள்ளும், வெளிச்ச வலைக்குள்ளும் சிக்காமல் ஒதுங்கி ஒதுங்கி ஓடுமிவரை நான் அழைத்தால் மறுக்கமாட்டார் என்ற நம்பிக்கையோடு அழைக்கிறேன்.

கே. பாலமுருகன் - கவிதை, சிறுகதை, கட்டுரை, பேச்சு என எல்லாத் துறையிலும் திறமை படைத்த இவர் மலேசியாவைச் சேர்ந்தவர். ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றலுக்கு ஏற்ற நண்பர். எழுத்துக்களில் நவீன யுத்தியைப் பரிசீலித்து வெற்றி காணும் இவரது மொழி நடை பிடித்தமானது.

பூங்குழலி - மருத்துவப் பதிவர். கவிதை, மொழிபெயர்ப்பு, அனுபவக் குறிப்புக்கள், விமர்சனங்கள் என எல்லாம் எழுதும் திறமை வாய்ந்தவர். எனது எழுத்துக்களுக்கு வெளிப்படையான, விரிவான கருத்துக்களைச் சொல்லும் அன்புச் சகோதரி.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

ஒளி ஓவியங்கள். அற்புதமாக இவர் எடுக்கும் அழகிய புகைப்படங்கள். அண்மைய லண்டன் புகைப்படங்களில் பல இடங்களை அறிய முடிந்தது. மழை நாளொன்று பற்றி இவர் எப்பொழுதோ எடுத்திருந்த புகைப்படமொன்று இன்னும் நினைவினை நனைக்கிறது.

17. பிடித்த விளையாட்டு?

மைதானத்தில் என்றால் உதைப்பந்தாட்டம்
தனித்து சோம்பலாக உணரும் தருணங்களில் சுடோகு, குறுக்கெழுத்து.

18. கண்ணாடி அணிபவரா?

வெயிலில் செல்லவேண்டி நேரும்போது மட்டும்.

19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

அதீத புனைவுகளற்ற, யதார்த்தமான, இயற்கையான படங்கள். ஒரு படத்தைப் பார்த்துமுடிந்த பின்பும் மனதுக்குள் அதன் கரு அடிக்கடி வந்து தொந்தரவு செய்துகொண்டே இருக்கவேண்டும். அப்படியான படங்கள் மிகப்பிடிக்கும்.

20. கடைசியாகப் பார்த்த படம்?

'பசங்க' - நடிப்பென்றே சொல்லமுடியாதவண்ணம் இயல்பாகத் திரையில் தோன்றிய எல்லோரினதும் நடிப்பு பிடித்திருந்தது. ஜீவாவாக நடித்திருந்த பையனின் நடிப்பு மிக நன்றாக இருக்கிறது. குரலும் அவருடன் சேர்ந்து ஒத்துழைத்திருப்பது சிறப்பு. அன்புவின் அப்பாவாக நடித்திருக்கும் நண்பர் சிவகுமாரை இப்பதிவு மூலம் பாராட்ட விரும்புகிறேன். அவரது மனைவியாக நடித்தவரும், ஜீவாவின் பெற்றோராக நடித்தவர்களும், நாயகனும் நாயகியும் கூட மிக நன்றாகத் தங்களுக்குத் தரப்பட்ட கதாபாத்திரங்களை உணர்ந்துசெய்திருக்கிறார்கள். பாராட்டுக்கள்.

21. பிடித்த பருவகாலம் எது?

மழைக்காலம்.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

சா.கந்தசாமியின் 'சாயாவனம்' மற்றும் காலித் ஹுசைனியின் 'A Thousand Splendid Suns'

23. உங்கள் டெக்ஸ்-டொப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு தடவை மாற்றுவீர்கள்?

மாற்றுவதில்லை.

24. உங்களுக்குப் பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடிக்காதவை: குழந்தையின் அழுகை மற்றும் அமைதியாக இருக்கவிரும்பும் சந்தர்ப்பங்களில் அதைக் குலைக்கும் எதுவும்.

பிடித்தவை : மேற்சொன்ன இரண்டும் தவிர்ந்த மற்ற எல்லாமும்.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்சத் தொலைவு?

கத்தார்

26. உங்களுக்கு ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

எழுத்து மற்றும் ஓவியம் - இருப்பதாக நம்புகிறேன்.

27. உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்?

பொய்யும் நம்பிக்கைத் துரோகமும்

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் ஒரு சாத்தான்?

உறக்கம், சில சமயம் சோம்பல்

29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?

உலகின் காடுகள், அந்தி மஞ்சள் மாலைநேரத்தில் அழகிய கடற்கரைகள், நதிக்கரைகள் எல்லாமும்.

30. எப்படி இருக்கவேண்டுமென்று ஆசை?

அன்பானவனாக, எல்லோருக்கும் ஏதாவதொரு விதத்திலாவது உதவிக்கொண்டே இருக்கவேண்டும்..எப்பொழுதும்.

31. மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

வந்த பிறகு சொல்கிறேன்.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்கள்.

நாடக மேடை. நாம் எல்லோரும் அதில் நடிகர்கள். விரும்பியோ விரும்பாமலோ நம் கதாபாத்திரத்தை ஏற்கத்தான் வேண்டியிருக்கிறது !

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்.

47 comments:

கோவி.கண்ணன் said...

32 பதிலகளும் சூப்பர் !

பசங்கப் படத்தை நானும் ரசித்துப் பார்த்தேன்.

விழியன் said...

அழைத்ததும் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி தம்பி.

ரசிக்கும்படியான பதில்கள்.

பூங்குழலி said...

பிடித்தவிடயம் - எதுவும் முடியுமென்ற தன்னம்பிக்கை, எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்குமுறையுடனும், நேர்த்தியுடனும், தூய்மையாகவும் இருக்க முயல்வது.

பிடிக்காதது - மேற்சொன்னவற்றை மற்றவர்களிடமும் எதிர்பார்ப்பது, குழந்தைகளை அழ வைப்பது.


பதில்கள் அருமை ரிஷான்

தமிழ் said...

/அப்படித்தான் எல்லோரும் சொல்கிறார்கள். எல்லோரிடமும் பேசுவேன். பழகுவேன். அதற்கு எனக்கு ஒரு புன்னகை போதுமானதாக இருக்கிறது. இதுவரையில் எதிரிகள் என்று யாருமில்லை. எல்லோருமே நண்பர்கள்தான். நல்லவர்கள்தான்./

/
பிடித்தவிடயம் - எதுவும் முடியுமென்ற தன்னம்பிக்கை, எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்குமுறையுடனும், நேர்த்தியுடனும், தூய்மையாகவும் இருக்க முயல்வது./

/நாடக மேடை. நாம் எல்லோரும் அதில் நடிகர்கள். விரும்பியோ விரும்பாமலோ நம் கதாபாத்திரத்தை ஏற்கத்தான் வேண்டியிருக்கிறது !/

தெளிவான பதில்கள்

அத்தனையும் அருமை

ஒளியவன் said...

நண்பனே! அருமையான உனது இந்தப் பதிவின் மூலம் உன்னைப் பற்றி சிற்சில விசயங்களைப் புதிதாக தெரிந்துகொண்டேன். தொடரட்டும் உனது எழுத்துக்கள்.

ஷைலஜா said...

ரிஷான்கிட்ட இன்னும் சில கேள்விகள் கேட்டுருக்கலாம்...(த்ரிஷா பாவனா தமனா லிஸ்ட்ல இல்லை ஏமாந்துட்டார் இளையதளபதி:)))

சும்மா சொல்லக்கூடாது நல்ல தெளிந்த நீரோடைபோன்ற பதில்கள்...ஓ ! சித்திரமும் கைப்பழக்கமா சொல்லவே இல்லையேஎ ரிஷு!

The Path said...

அன்பு நண்பரே வல்ல நாயன் எல்லா நலமும் உங்களுக்கு தருவானாக!

உங்கள் பதில்கள் அனைத்தும் அருமை

அன்புடன் சிக்கந்தர்

நாடோடி இலக்கியன் said...

அனைத்து பதில்களுமே அருமை நண்பா.

//முத்துநகையே..முழுநிலவே..குத்துவிளக்கே..கொடிமலரே//

நான் அடிக்கடி கேட்கும் பாடல்.

ஜெயஸ்ரீ ஷங்கர் said...

anbu rishi...
32 padhilil....neengal ungalai solliviteergal.......33 vadhaaga..engal aasirvaadham...neengal manidhil ninaikkum anaithum saadhithu periya saadhanaiyaalaraaga valam vara vendum....ungal thiramaigal anaithum naalukku naal merugeri ungalai ulagalaava eduthuch sella vendum...

Unknown said...

அன்புள்ள சகோதரர் ரிஷான்,

உங்கள் பதில்களில் அடக்கமும், பணிவும், அன்பின் எதிரொலியும் தெரிகின்றன.

அனுடன்,
குமார்(சிங்கை)

அன்புடன் அருணா said...

எல்லா விஷயத்தையும் ரொம்ப சிரத்தையுடன் செய்வீர்கள் என்பது பதிலில் தெரிகிறது....

coolzkarthi said...

பதில்கள் அருமை....

S.A. நவாஸுதீன் said...

எதார்த்தமான செயற்கை வர்ணம் இல்லாத பதில்கள். மிக அருமை. ஒரு புதிய பதிவராய் எனக்கு உங்களிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. தொடர்ந்து வருவேன். இன்ஷா அல்லாஹ்

மீறான் அன்வர் said...

எல்லா பதில்களும் அருமை, கடைசிபதில் அனுபவப்பட்டதோ என்னவோ ரொம்பவே நல்லா இருக்குடே

நீ என்றும் இன்புற்றிருக்க இறைவன் நாடட்டும் :)

Muruganandan M.K. said...

"அதீத புனைவுகளற்ற, யதார்த்தமான, இயற்கையான படங்கள். ஒரு படத்தைப் பார்த்துமுடிந்த பின்பும் மனதுக்குள் அதன் கரு அடிக்கடி வந்து தொந்தரவு செய்துகொண்டே இருக்கவேண்டும்..." உங்கள் கருத்தோடு என்னதும் முழுமையாக ஒத்து வருகிறது.

Kavinaya said...

தெளிந்த நீரோடை மாதிரியான அருமையான பதில்கள். வாழ்த்துகள் ரிஷு!

Anonymous said...

/. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்கள்.

நாடக மேடை. நாம் எல்லோரும் அதில் நடிகர்கள். விரும்பியோ விரும்பாமலோ நம் கதாபாத்திரத்தை ஏற்கத்தான் வேண்டியிருக்கிறது\

I agree with you 100%.
All 32 answers are really good. Enjoyed reading it.

Radha

cheena (சீனா) said...

அன்பின் ரிஷான்

மனப்பூர்வமான பதில்கள்

நல்வாழ்த்துகள்

malligai said...

elaa badhilkalum nalla iruku...Ans # 32 rompa pidichu iruku..:)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//31. மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

வந்த பிறகு சொல்கிறேன்//

வந்து பிறகு நீங்க வாயே திறக்க மாட்டீங்க-ன்னு தான் இப்பவே சொல்லச் சொல்றாங்க ரிசானு! :)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பிடிக்காதது - குழந்தைகளை அழ வைப்பது//

அடப்பாவி! அப்பறம் எதுக்குடா என்னைய போல குழந்தைகளை அழ வச்சே? :)))

கிரி said...

ரிஷான் நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் .. :-)

தமிழன்-கறுப்பி... said...

ம்ம்ம...

மாவனல்லைக்கு வாறம் எல்லாம் இது வரையும் யாரும் இல்லை எண்டுறதைப்பற்றி அறிந்து கொள்ள!

:))

M.Rishan Shareef said...

வாங்க கோவி. கண்ணன்,

//32 பதிலகளும் சூப்பர் !//

நன்றிங்க !

//பசங்கப் படத்தை நானும் ரசித்துப் பார்த்தேன்.//

நானும் !
அந்த புஜ்ஜிக் குட்டியை நினைத்து இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறேன். :)

M.Rishan Shareef said...

வாங்க விழியன் அண்ணா,

//அழைத்ததும் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி தம்பி.

ரசிக்கும்படியான பதில்கள்.//

பார்க்க இலகுவான கேள்விகளாக இருந்தது. பதிலளிக்கத்தான் சுயபரிசீலனை செய்யவேண்டி வந்தது. அழைத்ததற்கு நன்றி அண்ணா ! :)

M.Rishan Shareef said...

வாங்க பூங்குழலி,

//பிடித்தவிடயம் - எதுவும் முடியுமென்ற தன்னம்பிக்கை, எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்குமுறையுடனும், நேர்த்தியுடனும், தூய்மையாகவும் இருக்க முயல்வது.

பிடிக்காதது - மேற்சொன்னவற்றை மற்றவர்களிடமும் எதிர்பார்ப்பது, குழந்தைகளை அழ வைப்பது.


பதில்கள் அருமை ரிஷான்//

நன்றிங்க சகோதரி :)

M.Rishan Shareef said...

வாங்க திகழ்மிளிர்,

///அப்படித்தான் எல்லோரும் சொல்கிறார்கள். எல்லோரிடமும் பேசுவேன். பழகுவேன். அதற்கு எனக்கு ஒரு புன்னகை போதுமானதாக இருக்கிறது. இதுவரையில் எதிரிகள் என்று யாருமில்லை. எல்லோருமே நண்பர்கள்தான். நல்லவர்கள்தான்./

/
பிடித்தவிடயம் - எதுவும் முடியுமென்ற தன்னம்பிக்கை, எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்குமுறையுடனும், நேர்த்தியுடனும், தூய்மையாகவும் இருக்க முயல்வது./

/நாடக மேடை. நாம் எல்லோரும் அதில் நடிகர்கள். விரும்பியோ விரும்பாமலோ நம் கதாபாத்திரத்தை ஏற்கத்தான் வேண்டியிருக்கிறது !/

தெளிவான பதில்கள்

அத்தனையும் அருமை//

நன்றி நண்பரே ! :)

M.Rishan Shareef said...

வாங்க ஒளியவன்,

//நண்பனே! அருமையான உனது இந்தப் பதிவின் மூலம் உன்னைப் பற்றி சிற்சில விசயங்களைப் புதிதாக தெரிந்துகொண்டேன். தொடரட்டும் உனது எழுத்துக்கள்.//

நன்றி நண்பா !
இன்னும் கேட்டிருந்தால் உளறிக் கொட்டியிருப்பேன்னு நினைக்கிறேன் :)

அடுத்ததா உங்களைப் பற்றிப் பார்க்கணும்னு ஆசை..!

M.Rishan Shareef said...

வாங்க ஷைலஜா அக்கா,

//ரிஷான்கிட்ட இன்னும் சில கேள்விகள் கேட்டுருக்கலாம்...(த்ரிஷா பாவனா தமனா லிஸ்ட்ல இல்லை ஏமாந்துட்டார் இளையதளபதி:))) //

அவ்வ்வ்வ்..ஏனிந்தக் கொலைவெறி..
அது சரி..இந்தப் புள்ளைங்கெல்லாம் யாரு? :P

//சும்மா சொல்லக்கூடாது நல்ல தெளிந்த நீரோடைபோன்ற பதில்கள்...ஓ ! சித்திரமும் கைப்பழக்கமா சொல்லவே இல்லையேஎ ரிஷு!//

:) வரைவேன்.. ஆனா இப்ப நேரமே கிடைப்பதில்லை. இந்த விடயத்தில் உங்களைப் பார்த்தால்தான் பொறாமையாக இருக்கிறது. வீடு,எழுத்து,ஓவியம், பாட்டு, டப்பிங்,யோகா, சமையல்னு எல்லாத்துக்கும் எங்கிருந்துதான் உங்களுக்கு நேரம் கிடைக்குதோ?
கண்ணு படாம இருக்கணும் அக்காவுக்கு !

M.Rishan Shareef said...

வாங்க சிக்கந்தர்,

//அன்பு நண்பரே வல்ல நாயன் எல்லா நலமும் உங்களுக்கு தருவானாக!//

உங்கள் பிரார்த்தனை பலிக்கட்டும் நண்பரே..உங்களுக்கும் எனக்கும் !

//உங்கள் பதில்கள் அனைத்தும் அருமை //

நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

வாங்க நாடோடி இலக்கியன்,

//அனைத்து பதில்களுமே அருமை நண்பா.//

நன்றி நண்பா ! :)

//முத்துநகையே..முழுநிலவே..குத்துவிளக்கே..கொடிமலரே//

நான் அடிக்கடி கேட்கும் பாடல்.//

எனக்கும் பிடித்த பாடல். எந்தப் படமென்று தெரியுமா? யூட்யூபில் தேடினேன். கிடைக்கவில்லை. உங்களுக்குக் கிடைத்தால் தந்துதவுங்கள் நண்பா !

M.Rishan Shareef said...

வாங்க ஜெயஸ்ரீ ஷங்கர்,

//anbu rishi...
32 padhilil....neengal ungalai solliviteergal.......33 vadhaaga..engal aasirvaadham...neengal manidhil ninaikkum anaithum saadhithu periya saadhanaiyaalaraaga valam vara vendum....ungal thiramaigal anaithum naalukku naal merugeri ungalai ulagalaava eduthuch sella vendum...//

உங்கள் பிரார்த்தனைகளும் ஆசிர்வாதமும் கண்டு மனம்மகிழ்ந்தேன்.

நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

வாங்க குமார்(சிங்கை),

உங்கள் முதல்வருகையில் மகிழ்கிறேன். உங்கள் வரவு நல்வரவாகட்டும் !

//அன்புள்ள சகோதரர் ரிஷான்,

உங்கள் பதில்களில் அடக்கமும், பணிவும், அன்பின் எதிரொலியும் தெரிகின்றன. //

நன்றி நண்பரே ! :)

M.Rishan Shareef said...

வாங்க அன்புடன் அருணா,

//எல்லா விஷயத்தையும் ரொம்ப சிரத்தையுடன் செய்வீர்கள் என்பது பதிலில் தெரிகிறது....//

:)
அப்பதானே வாழ்க்கை சுவாரஸ்யமாகவும் ரசிக்கத்தக்கதாகவும் இருக்கும்.

நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

வாங்க கூல்கார்க்கி,

//பதில்கள் அருமை....//

:)
நன்றி நண்பா !!

M.Rishan Shareef said...

வாங்க நவாஸுத்தீன்,

//எதார்த்தமான செயற்கை வர்ணம் இல்லாத பதில்கள். மிக அருமை. ஒரு புதிய பதிவராய் எனக்கு உங்களிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. தொடர்ந்து வருவேன். இன்ஷா அல்லாஹ்//

நன்றி நண்பரே. :)
உங்கள் முதல்வருகை மகிழ்ச்சி தருகிறது. நல்வரவாகட்டும். தொடர்ந்து வாருங்கள் !

M.Rishan Shareef said...

வாங்க மீறான் அன்வர்,

//எல்லா பதில்களும் அருமை, கடைசிபதில் அனுபவப்பட்டதோ என்னவோ ரொம்பவே நல்லா இருக்குடே//

:)
20 வருஷம் வாழ்ந்த வாழ்க்கையில எத்தனை பாடம் படித்திருப்போம் :)

//நீ என்றும் இன்புற்றிருக்க இறைவன் நாடட்டும் :)//

ம்ம்..உனக்கும் எனக்கும் :)

நன்றி நண்பா..!

M.Rishan Shareef said...

வாங்க டொக்டர்,

//"அதீத புனைவுகளற்ற, யதார்த்தமான, இயற்கையான படங்கள். ஒரு படத்தைப் பார்த்துமுடிந்த பின்பும் மனதுக்குள் அதன் கரு அடிக்கடி வந்து தொந்தரவு செய்துகொண்டே இருக்கவேண்டும்..." உங்கள் கருத்தோடு என்னதும் முழுமையாக ஒத்து வருகிறது.//

ஆமாம். :)
சமீபகாலமாக இதுபோன்ற நல்ல தமிழ்ப்படங்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. பார்க்கலாம் :)

நன்றி டொக்டர் !

M.Rishan Shareef said...

வாங்க கவிநயா,

//தெளிந்த நீரோடை மாதிரியான அருமையான பதில்கள். வாழ்த்துகள் ரிஷு!//

:)
வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

வாங்க ராதா,

///. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்கள்.

நாடக மேடை. நாம் எல்லோரும் அதில் நடிகர்கள். விரும்பியோ விரும்பாமலோ நம் கதாபாத்திரத்தை ஏற்கத்தான் வேண்டியிருக்கிறது\

I agree with you 100%.
All 32 answers are really good. Enjoyed reading it.

Radha//

:)
நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

வாங்க சீனா ஐயா,

//அன்பின் ரிஷான்

மனப்பூர்வமான பதில்கள்

நல்வாழ்த்துகள்//

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

வாங்க வாணி,

//elaa badhilkalum nalla iruku...Ans # 32 rompa pidichu iruku..:)//

நன்றி தோழி :)

M.Rishan Shareef said...

வாங்க கண்ணபிரான் ரவிஷங்கர்,

////31. மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

வந்த பிறகு சொல்கிறேன்//

வந்து பிறகு நீங்க வாயே திறக்க மாட்டீங்க-ன்னு தான் இப்பவே சொல்லச் சொல்றாங்க ரிசானு! :)))//

ஆஹா :D
அப்ப நான் ஒரு பல் டாக்டரைப் பார்த்துக் கட்டிக்கிறேன். அவங்கதான் அடிக்கடி வாயைத் திறக்கச் சொல்வாங்க :P

M.Rishan Shareef said...

////பிடிக்காதது - குழந்தைகளை அழ வைப்பது//

அடப்பாவி! அப்பறம் எதுக்குடா என்னைய போல குழந்தைகளை அழ வச்சே? :)))//

இது குழந்தைகளுக்குத் தெரிஞ்சா எல்லாம் தானா அழும் நண்பர் கேயாரெஸ் :P

M.Rishan Shareef said...

வாங்க கிரி,

//ரிஷான் நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் .. :-)//

:)
நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

வாங்க தமிழன் - கறுப்பி,

//ம்ம்ம...

மாவனல்லைக்கு வாறம் எல்லாம் இது வரையும் யாரும் இல்லை எண்டுறதைப்பற்றி அறிந்து கொள்ள!

:))//

:)
வாங்கோ வாங்கோ.. மாவனல்லையைச் சுற்றிக் காட்டுறேன்.விட்டுப் போகமாட்டீங்க :)

நன்றி நண்பா !

ராமலக்ஷ்மி said...

எல்லாப் பதில்களும் சுவாரஸ்யம். வாழ்வு பற்றிய பதில் அருமை, அது குறித்து நான் எழுதிய கவிதையொன்று வலையேற்றுகையில் பாருங்கள்:)!